செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் குவாட்டமாலா எரிமலை வெடித்ததில் 25 பேர் பலி

குவாட்டமாலா எரிமலை வெடித்ததில் 25 பேர் பலி

1 minutes read

 

குவாட்டமாலாவிலுள்ள பேகோ என்ற எரிமலை வெடித்ததில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 300 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குவாட்டமாலாவின் தலைநகரான குவாட்டமாலா சிட்டிக்கு தென்-மேற்கு திசையில் 40 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்த எரிமலையானது வானத்தை நோக்கி கரும் புகையையும், சாம்பலையும் வெளியிட்டு வருகிறது.

ஒரு பெரும் ஆறு போன்று வெளியேறிய எரிமலை குழம்பான லாவா அருகிலுள்ள எல் ரோடியோ என்ற கிராமத்தை சூழ்ந்து நகர்ந்ததில் அங்கிருந்த வீடுகளும், அதிலிருந்தவர்களும் தீயில் சிக்கி பலியாயினர் என்று அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை முகமையான கான்ரெட் தெரிவித்துள்ளது.

எரிமலை தொடர்ந்து கக்கி வரும் சாம்பலின் காரணமாக குவாட்டமாலா நகரத்திலுள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

தேசிய அளவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஜிம்மி மொராலஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 1974ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெறும் மிகப் பெரிய எரிமலை வெடிப்பு என்று உள்ளூர் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

(BBC நன்றி)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.