செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சிங்கள மீனவர்களிடமிருந்து எமது கடல் வளத்தை தா! என வடமராட்சி கிழக்கு மக்கள்! (படங்கள் இணைப்பு)

சிங்கள மீனவர்களிடமிருந்து எமது கடல் வளத்தை தா! என வடமராட்சி கிழக்கு மக்கள்! (படங்கள் இணைப்பு)

1 minutes read

 

யாழில் அத்துமீறி தங்கியிருக்கும் தென்பகுதி சிங்கள மீனவர்கள்: வெளியேற்றுமாறு யாழ். மருதங்கேணி பகுதியில் உள்ள மீனவர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் ஆகியோர் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அத்துமீறி தங்கியுள்ள தென்பகுதி
சிங்கள மீனவர்களை உடனடியாக வெளியேற்றக்கோரி குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ் போராட்டமானது தென்பகுதி மீனவர்கள் வாடிகள் அமைத்து தங்கியுள்ள இடத்திலிருந்து மருதங்கேணி பிரதேச செயலகம் வரை ஊர்வலமாக வந்து பின்னர் மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

மீன்பிடி திணைக்களமே எமது வளத்தை மீட்டுத்தா, பிரதேச செயலகமே மீட்டுத்தா எமது கடல்வளத்தை அதிகாரிகளே அத்துமீறிய கடல்தொழிலாளர்கள் மீது அசமந்தப்போக்கை காட்டாதே என பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தமது கடல்வளத்தை பாதுகாக்கும்படியும், தென்பகுதி மீனவர்களால் உருவாகப்போகும் வாழ்வாதார நெருக்கடியில் இருந்து தம்மை பாதுகாக்கும்படியும் கேட்டு மகஜர் ஒன்றும், மருதங்கேணி பிரதேச செயலருக்கும், யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இதன்போது கையளிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.