செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா சீனப் பெண்ணொருவர் இலங்கையில் கைது!

சீனப் பெண்ணொருவர் இலங்கையில் கைது!

0 minutes read

 

சட்டவிரோதமான முறையில் சீனாவிற்கு கொண்டு செல்ல முற்பட்ட இலங்கை நாணயத்தாள்களை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நாணயத்தாள்களை கடத்த முற்பட்ட பெண் சீன நாட்டை சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 868 என்ற விமானத்தில் சீனாவின் பீஜிங் நகரை நோக்கி பயணிக்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்து பின்னர் விமானத்திற்கு ஏறுவதற்காக 12 ஆவது நுழைவாயிலூடாக செல்ல முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் பயணப்பையில் இருந்து 255 ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றின் மொத்த பெறுமதி 12,75,000 ரூபா எனவும் சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.