9
நேற்று 08.06.2018 இரவு 11 மணியளவில் உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை மேற்கொண்ட நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு காத்தான்குடி – டீன் வீதி – அலியார் சந்திக்கு அருகில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்றின் உரிமையாளரே நேற்று இரவு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் ,மட்டக்களப்பு காத்தான்கடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
