குற்றப்புலனாய்வு பிரிவில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர 5 மணித்தியாளங்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றப்புலனாய்வு பிரிவுக்கு ஒரு மில்லியன் ரூபா பெற்றுக்கொண்டமை தொடர்பில் வாக்குமூலம் அளிக்கவே சென்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
பர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸிடமிருந்து பெற்றுக் கொண்ட காசோலையை பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் ஊடாக தனது பெயரிற்கு மாற்றிக் கொண்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
