மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்கு சென்ற மீனவர்களின் படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவர்கள் நடுக்கடலில் தவித்து கொண்டிருந்த மீன்பிடி படகை பருத்தித்துறை கடல் பிரதேசத்தில் வழிதவறி தவித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவிக்கிறது.
சம்பவம் தொடர்பாக கடற்படை தலைமையகத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் 26 கடல் மைல் தொலைவில் படகில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்றின் மூலம் அவர்களை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வந்ததாக இலங்கை கடற்படை கூறியுள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேட்கொண்டு இலங்கை கடற்படை மற்றும் நீரியல் துறையும் வருகிறார்கள்.
