இலங்கைக்கும், நோர்வேவுக்கும் இடையிலான மீன்பிடி தொடர்பான தொழில்நுட்ப மற்றும் நிறுவன ஒத்துழைப்பு திட்டத்தின் அடிப்படையிலேயே கடல் வளங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, நோர்வேயின் ஆய்வுக் கப்பலான, Dr Fridtjof Nansen எதிர்வரும் 21 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.
இந்த ஆய்வுக் கப்பல், வங்காள விரிகுடாவில் இலங்கையின் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 26 நாட்கள் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.
இலங்கை மற்றும் நோர்வேயைச் சேர்ந்த விஞ்ஞானிகளும், ஆய்வாளர்களும் இந்த ஆய்வுகளில் ஈடுபடவுள்ளனர்.
இலங்கைக்கும், நோர்வேவுக்கும் இடையிலான மீன்பிடி தொடர்பான தொழில்நுட்ப மற்றும் நிறுவன ஒத்துழைப்பு திட்டத்தின் அடிப்படையிலேயே இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
மீன் வளம் உள்ளிட்ட கடல் வளங்களின் தற்போதைய இருப்பு தொடர்பாக மதிப்பீடுகளைச் செய்வதே இந்த ஆய்வின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இறுதியாக 1978 முதல் 1980 காலப்பகுதியில், இந்தக் கப்பல் கடல் வள ஆய்வை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
