முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசிய கொடி மற்றும் வெடி பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார் என்று ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 20கிலோ கிராம் ஏடைகொண்ட கிளைமோர் 1, T56 ரவுன்ஸ் 98, கைக்குண்டு 1, றிமோட் கொன்ரோல் 4, விடுதலைப்புலிகளின் சீருடை 2, விடுதலைப்புலிகளின் புலிக்கொடி 40-45 கைப்பற்றப்பட்டுள்ளது.
விதியால் சென்ற முச்சக்கர வண்டி ஒன்றை பொலிஸார் சோதனையிட்ட போதே அதிலிருந்து வெடிபொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன.
இதன்போது ஒருவர் தப்பியோடியதுடன் இருவர்கைது செய்யப்பட்டுள்ளனர்.
காட்டுக்குள் தப்பிச் சென்ற நபரை கைது செய்யும் பணியில் இராணுவத்தினர், விசேட அதிரடி படையினர், பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடம் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் முன்னெடுத்துவருகிறார்கள்
