செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் முயற்சி வெற்றி!

போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் முயற்சி வெற்றி!

0 minutes read

 

இப்பாகமுவ மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர் கூடத்தை திறந்து வைத்து அரச அதிகரிக்கும் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போதைப்பொருள் விநியோக வலைப்பின்னலை முடக்குவதன் மூலம் போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பிரச்சினை காரணமாக இன்று சிறு பிள்ளையும் வீதியில் நடந்து செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் போதைப்பொருள் வர்த்தகம் முடக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

ஆனால் அன்று போதைப்பொருள் விநியோகஸ்தர்கள் மாத்திரம் சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கப்பட்டார்கள். பெருமளவில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு அரசியல் ரீதியாக பாதுகாப்பு அளிக்கப்பட்டது என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.