செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா டி.வி. நடிகை பிரியங்காவின் தற்கொலை காரணம் இதுதான்!

டி.வி. நடிகை பிரியங்காவின் தற்கொலை காரணம் இதுதான்!

1 minutes read

 

குழந்தை பெற்றுக் கொள்ள கூடாது என்று தொலைக்காட்சி நடிகைகளுக்கு கட்டுப்பாடு போடப்படுவதாகவும் டி.வி. நடிகை பிரியங்காவும் அதுபோன்ற பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கலாம்’ என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து தொடர்களில் நடித்துக்கொண்டிருக்கும் பிரியங்காவின் தோழிகள் சிலர் கூறியதாவது, ‘தற்போதைய சூழலில் உச்சத்தில் நடித்து வரும் பல நடிகைகள் குழந்தை பெற்றுக் கொள்வதை வாய்ப்புக்காக தள்ளிப்போடுகிறார்கள்.

நடிக்க வரும்போது எந்தக் கேரக்டரில் நடிக்க வருகிறார்களோ அதைப் பொறுத்து இத்தனை வருடங்களுக்கு நான் தாய்மை அடையமாட்டேன் என்கிற ஒப்பந்தத்திலும் கையெழுத்திடுகிறார்கள்.

ஒருவர் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும்போது அவர் தாய்மை அடைந்து வயிறு பெரியதாகத் தெரிய ஆரம்பித்தால் அந்தக் கதாபாத்திரத்துக்கு சரியாக இருக்காது. அதனால் தான் இந்த ஒப்பந்தம் போடப்படுகிறது.

இதுபோன்ற ஒப்பந்தங்கள் கட்டாயம் குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். தற்போது சீரியல்களில் நடித்துவரும் நடிகைகளுக்கும் இதுபோன்ற மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். தொடர்களில் நடிக்கும் நடிகைகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. டிவி தொடர்பான சங்கங்கள் இதற்கு மனிதாபிமான அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.