செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பலாங்கொடைபகுதியில் சிறுத்தையால் மக்களுக்கு அச்சறுத்தல்!

பலாங்கொடைபகுதியில் சிறுத்தையால் மக்களுக்கு அச்சறுத்தல்!

0 minutes read

 

காணாமல் போயுள்ள பலாங்கொடை – சமனலவத்த பிரதேசத்தை சேர்ந்த 10 வயது சிறுவனை கடந்த இரண்டு தினங்களாக தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

தற்போதைய நிலையில் , இராணுவ குழுவொன்று சமனலவத்த பிரதேசத்தை நோக்கி சென்றுள்ளார்கள் 5ம் தரத்தில் கல்வி கற்கும் சிறுவன் ஒருவரே இவ்வாறு காணாமல் போயிருந்தார்.

கடந்த 20ம் திகதி சிறுவனின் தந்தை விறகு வெட்டுவதற்காக காட்டிற்கு சென்றுள்ள நிலையில் , பின்னர் சிறுவன், தந்தை இருக்கும் இடத்திற்கு செல்வதாக தாயிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்து வௌியேறியுள்ளார்.

எனினும் , தந்தை விறகு வெட்டி வீடு திரும்பிய போதும் , மகன் வீடு திரும்பவில்லை. அன்றைய நாள் தொடக்கம் சிறுவன் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை.

எவ்வாறாயினும் , பலாங்கொடை சமனலவத்த பிரதேசத்தை அண்டிய பிரதேசங்களில் கடந்த தினங்களில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சிறுவனுக்கு சிறுத்தைகளால் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என சந்தேகிக்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.