செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டு எதிர்க்கட்சிக்குத்தான் பொருத்தம்!

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டு எதிர்க்கட்சிக்குத்தான் பொருத்தம்!

0 minutes read

 

பாராளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அடுத்த படியாக கூடுதலான அங்கத்தவர்களைக் கொண்டுள்ள கூட்டு எதிர்க்கட்சியை உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் எதிர்க்கட்சித் தலைமைப் பதவியும் எமக்கு வழங்கப்பட வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எனக்கு வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் மாத்திரம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு எதிர்க்கட்சித் தலைமை வழங்கப்பட்டுள்ளது. அது ஜனநாயக விரோத செயலாகும். மேலும் அவ்வெதிர்க்கட்சி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சி போலவே செயற்படுகிறது.

எனவே கடந்த வாரமும் சபாநாயகரைச் சந்தித்து கூட்டு எதிர்க்கட்சிக்கு எதிர்க்கட்சித் தமலைமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம். அது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் வரையில் சபாநாயகர் அவகாசம் கோரியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.