கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் நிர்மானிக்கப்;பட்ட பொறியியல் பீட கட்டிடம், உத்தியோகஸ்தர் விடுதி மற்றும் மாணவர்கள் விடுதி ஆகிய கட்டடத்தொகுதிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக இன்று (04) திறந்;துவைத்துள்ளார்.
இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்;க அவர்கள்; கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அரச நிதியில் இருந்து சுமார் இரண்டாயிரத்து நூறு மில்லியன் ரூபா செலவில் பொறியில் பீடத்திற்காக நிர்மானிக்கப்பட்டபத்துக்கட்டடங்களையும் உத்தியோகஸ்தர் விடுதி மற்றும் ஆண் பெண் மாணவர்களுக்கான விடுதித் தொகுதிகள் விரிவுரையாளர்களுக்கான அலுவலகம் என்பவற்றை இன்று காலை 11.00 திறந்துவைத்துள்ளார்.
இதில் உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, பாராளுமன்ற உறுப்பினர்களான விஜயகலா மகேஸ்வரன், சித்தாத்தன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள், பல்கலைக்கழக விரைவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும விசேட அதிதகள் என பலர் கலந்;து கொண்டனர்.