விசாரணை படத்துக்கு விருது கிடைத்திருப்பது தொடர்ந்து நல்ல படைப்புகளை தர வேண்டும் என்ற உற்சாகத்தை அளிக்கிறது என்று நடிகரும், விசாரணை படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சில படைப்புகளைத் தொடங்கும்போது நமக்கே தெரியும். இந்தப் படைப்பு மிக முக்கிய இடத்தைப் பெறும் என்பது. அதைப் போன்ற ஒரு படைப்புதான் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்ற விசாரணை திரைப்படம். இந்தத் திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்றுள்ள சமுத்திரக்கனி மற்றும் படத்தொகுப்பாளர் கிஷோருக்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
விசாரணை படத்துக்கு 3 விருதுகள் என்பது எனக்கு 3 மடங்கு மகிழ்ச்சியான விஷயமாகும், மூன்று தேசிய விருதுகளை தந்துள்ள இயக்குநர் வெற்றிமாறனுக்கு நன்றி கூறுவது எனது கடமையாகும். இதைப் போன்ற படைப்புகளை தமிழ் மக்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள் என்ற விஷயம் எனக்கு மகிழ்ச்சியையும், மேலும் இதுபோன்ற படைப்பை