செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா கீர்த்தி சுரேஷ்க்கு கிடைத்த வரவேற்பு!

கீர்த்தி சுரேஷ்க்கு கிடைத்த வரவேற்பு!

1 minutes read

 

மகாநதி படம் மூலம் பெரும் புகழ் பெற்ற கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் பிரபல நடிகையான சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் மிகவும் வரவேற்பு பெற்றது.

தமிழிலும் இப்படம் நடிகையர் திலகம் என வெளியானது. ஆனால் தெலுங்கில் தான் அதிக வசூலை அள்ளியது. தற்போது கீர்த்தி விஜய்யுடன் சர்க்கார் படத்திலும், விக்ரமுடன் சாமி ஸ்கொயர் படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் விஷாலுக்கு ஜோடியாக சண்டகோழி 2 படத்திலும் நடித்து வருகிறார். இப்படம் 13 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் லிங்குசாமியால் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது.

முதல் பாகம் தெலுங்கிலும் வெற்றி பெற்றது. அத்துடன் விஷால் நடித்து அண்மையில் வெளியான அபிமன்யூடு (இரும்பு திரை) நல்ல வரவேற்பை பெற்றது. சமந்தாவும் இதில் நடித்திருந்தார்.

இதனால் தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் தாகூர் மது, கீர்த்தி சுரேஷ் மற்றும் விஷால் இருவரின் மார்க்கெட்டையும் மனதில் வைத்து சண்டகோழி 2 படத்தை போட்டி போட்டு அதிக விலைக்கு வாங்கியுள்ளாராம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.