செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா முத்தக் காட்சி வேண்டாம்! நடிகை கீர்த்தி சுரேஷ்!

முத்தக் காட்சி வேண்டாம்! நடிகை கீர்த்தி சுரேஷ்!

1 minutes read

 

தமிழ் சினிமாவில் கடும் பிசியான நாயகியாக மாறியிருக்கும் கீர்த்தி சுரேஷ் கதைக்கு தேவையாக இருந்தாலும் முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறினார்.

கீர்த்தி சுரேஷ் தற்போது, விஜய் ஜோடியாக சர்கார், விக்ரம் ஜோடியாக சாமி ஸ்கொயர், விஷால் ஜோடியாக சண்டக்கோழி 2 உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கிறது. சாவித்திரி வாழ்க்கை கதையில் நடித்த பிறகு தமிழ், தெலுங்கு பட உலகில் வலுவான இடத்தை பிடித்து இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். தனது சினிமா அனுபவங்கள் குறித்து கீர்த்தி சுரேஷ் பேசும்போது,

“திரையுலகில் என்னை விட அழகும், திறமையும் உள்ள நடிகைகள் பலர் இருக்கிறார்கள். ஆனாலும் எனக்கு நல்ல கதைகளும் கதாபாத்திரங்களும் அமைவதற்கு எனது அதிர்ஷ்டம் தான் காரணம். அதிர்ஷ்டம் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதேநேரம் திறமையும் முக்கியம். சாவித்திரி வாழ்க்கை கதை படத்தில் நடித்த பிறகு அழுத்தமான கதைகளில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன.

கதைகளை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறேன். கதைகள் கேட்கும்போது இதில் நடிக்கலாம் என்று மனது சொன்னால் அதை ஏற்கிறேன். முத்த காட்சியில் நடிக்க விருப்பம் இல்லை. அதுபோன்ற காட்சிகளுடன் எனக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. முத்த காட்சியில் நடிக்க மாட்டேன் என்றதால் அந்த பட வாய்ப்புகள் கைநழுவி போய்விட்டன.

எனக்கு சவுகரியமாக இல்லாத கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன். கதைக்கு தேவையாக இருந்தாலும் சம்மதிக்க மாட்டேன். எனக்கு கூச்ச சுபாவம் உண்டு. முத்த காட்சிகளில் என்னால் சகஜமாக நடிக்கவும் முடியாது என கீர்த்தி சுரேஷ் கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.