மதிசுதாவின் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்த பார்வதி சிவபாதத்திற்கு விருது

இந்த விருதை நாங்கள் கொண்டாடிக் களிக்கப் போகின்றோம். ஏனென்றால் ஈழ சினிமாவில் இது ஒரு வரலாறாகும். இந்த முதிய பெரும் கலைஞர் ஏற்கனவே எங்களின் காலத்தால் அழியாத பொக்கிசம் ஆவார்.

“வெந்து தணிந்தது காடு” என்ற ஒட்டுமொத்த திரைப்படமே பாத்திர வடிவமைப்பில் இவரால் தாங்கப்பட்ட திரைப்படம் தான்.அவர் உழைப்பின் பலனாக Andaman & Nicobar இன் International Film Festival இல் Best Supporting actress என்ற சர்வதேச விருதை கடந்த வாரம் பெற்றிருக்கின்றார்.

எமது தாயகத்தின் பழம்பெரும் பாடகியான “பார்வதி சிவபாதம்” அம்மா அவர்கள்.

72 வது வயதைக் கடந்த நிலையிலும் ஒரு திரைப்படத்தில் அவர் செய்த பணி என்பது மிகப் பெரியது. அதுவும் என் படம் என்பது மனதாலும் உடலாலும் வலு இருந்தால் மட்டுமே இயங்க முடியும்.

இத்திரைப்படம் Low budget என்பதால் ஒரு நாளைக்கு 45 Shots வீதம் எடுத்தால் தான் பட்ஜெட் தாங்கும். அதனால் 14 மணித்தியாலங்கள் படப்பிடிப்பு போகும், பகல் 10 மணித்தியாலம் இரவுக்காட்சி 4 மணித்தியாலம்.

10 நாளில் படப்பிடிப்பை முடித்திருந்தோம். அம்மாவின் உடல்நிலையை பொறுத்து போவோம் என முடிவெடுத்தாலும் இறுதி வரை களைக்காமல் சலிக்காமல் இருப்பது பார்வதி அம்மா மட்டும் தான்,

“எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது”

“போரம்மா உனையன்றி யாரம்மா”

“மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி”

இந்த தாயகப் பாடல்கள் எத்தனை பேருக்கு நினைவிருக்குமோ தெரியாது ஆனால் தாயகத்தின் பட்டி தொட்டி எங்கும் ஒலித்த அந்த கணீர் குரல் எங்கள் திரைப்படத்துக்கு உயிர் கொடுத்திருப்பதை கொண்டாடாமல் விடலாமா ?

ஆசிரியர்