செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா அருள்நிதியின் ‘தேஜாவு’ வெளியீட்டு திகதி அறிவிப்பு

அருள்நிதியின் ‘தேஜாவு’ வெளியீட்டு திகதி அறிவிப்பு

1 minutes read

நடிகர் அருள்நிதி நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படமான ‘தேஜாவு’ படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘தேஜாவு’. இதில் அருள்நிதி கதையின் நாயகனாக நடிக்கிறார். 

இவருடன் மூத்த நடிகை மதுபாலா, அச்சுத்குமார், ஸ்மிருதி, ராகவ் விஜய், சேத்தன், மைம் கோபி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். 

வைட் கார்பட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே. விஜய் பாண்டி தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

அந்த வகையில் நடிகர் அருள்நிதியின் பிறந்த நாளான ஜூலை மாதம் 21ஆம் திகதியன்று ‘தேஜாவு’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அருள்நிதி நடிப்பில் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து ‘டி ப்ளாக்’ மற்றும் ‘தேஜாவு’ ஆகிய இரண்டு படங்கள் வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.