செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஷாருக்கான் படத்தின் புதிய அப்டேட்..

ஷாருக்கான் படத்தின் புதிய அப்டேட்..

0 minutes read

இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான் சமீபத்தில் அட்லியின் அடுத்த படமான ஜவான் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதைத்தொடர்ந்து அண்மையில் ஜவான் படத்தின் டீசர் வெளியாகி வைரலானது.

இதையடுத்து இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் படம் “பதான்”. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

நடிகர் ஷாருக்கான் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி 30 வருடங்கள் ஆனதையொட்டி “பதான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முன்னோட்டம் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

மேலும், பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.