செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் வாழைக்காய், கீரை கறி!

வாழைக்காய், கீரை கறி!

0 minutes read

என்னென்ன தேவை?
பொடியாக நறுக்கிய முளைக்கீரை – 2 கப்,
வாழைக்காய் – 1/4 கப்,
உப்பு – தேவைக்கு,
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
நறுக்கிய வெங்காயம் – 4 டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் – 1/2 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள்,
தனியாத்தூள்,
மிளகாய்த்தூள்,
சீரகம் – தலா 1 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் – 1/2 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு – 2 டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?
வாழைக்காயை உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து சீரகம் தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, உப்பு, தனியாத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கீரை கலந்து, லேசாக தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும். கீரை வெந்ததும் வெந்த வாழைக்காய் சேர்த்து நன்றாக கிளறி மேலே கரம்மசாலாத்தூள் தூவி இறக்கி, எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்றாக கிளறவும். சாதத்துடன் பரிமாறவும்.

நன்றி-தினகரன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.