Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் தித்திப்பான கேரட் பஜ்ஜி

தித்திப்பான கேரட் பஜ்ஜி

1 minutes read

தேவையான பொருட்கள்

கேரட் – கால் கிலோ

கடலை மாவு – 2 கப்

அரிசி மாவு – 1/2 கப்

ஓமம் – 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

சாட் மசாலா – 1/2 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்

பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன்

எண்ணெய் – 1/2 டீஸ்பூன்

உப்பு – சுவைக்கேற்ப

தண்ணீர் – தேவையான அளவு

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கேரட்டின் தோலை நீக்கிவிட்டு, அதை மெல்லிய வட்டத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, ஓமம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து, பின் மெதுவாக நீரை ஊற்றி கட்டிகளின்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
  • அதில் பேக்கிங் சோடா மற்றும் பஜ்ஜி மொறுமொறுப்புடன் இருக்க சிறிது சூடான எண்ணெய் ஊற்றி 15 நிமிடம் அப்படியே விட்டு, பின் கிளறி விட வேண்டும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கேரட்டை பஜ்ஜி மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான கேரட் பஜ்ஜி தயார்.

நன்றி | மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More