Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் சுவையான எண்ணெய் கத்திரிக்காய் பொரியல்

சுவையான எண்ணெய் கத்திரிக்காய் பொரியல்

1 minutes read

தேவையான பொருட்கள்:

  • நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
  • கடுகு – 1/2 டீஸ்பூன்

காளான் குருமாகாளான் குருமா

  • உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
  • சீரகம் – 1/2 டீஸ்பூன்
  • சோம்பு – 1/2 டீஸ்பூன்

சுவையான… முட்டைக்கோஸ் சட்னிசுவையான… முட்டைக்கோஸ் சட்னி

  • வரமிளகாய் – 1
  • கறிவேப்பிலை – சிறிது
  • வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
  • பூண்டு – 5 பல்
  • கத்திரிக்காய் – 4 (பெரியது மற்றும் நீளமாக துண்டுகளாக்கப்பட்டது)
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • உப்பு – சுவைக்கேற்ப
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்


செய்முறை:

  • முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், சோம்பு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
  • பின்னர் அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
  • பின்பு கத்திரிக்காயை சேர்த்து நன்கு வதக்கி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, கத்திரிக்காயை நன்கு வேக வைக்க வேண்டும்.
  • கத்திரிக்காய் நன்கு வெந்து சுருங்கியதும், அதில் மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.
  • மிளகாய் தூளின் பச்சை வாசனை போனதும், அடுப்பை அணைத்து இறக்கினால், சுவையான எண்ணெய் கத்திரிக்காய் பொரியல் தயார்.

நன்றி | Tamil Beauty

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More