செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் மரவள்ளிக்கிழங்கு புட்டு!

மரவள்ளிக்கிழங்கு புட்டு!

1 minutes read

பள்ளி முடிந்து பசியோட வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு எப்போதும் எண்ணெய் வறுவல்கள் கொடுக்காமல், சத்தானதும் ருசியானதும் ஆன ஸ்நாக்ஸ் ஏதாவது செய்யணும்னு நினைக்கிறீர்களா? உங்க வீட்டுல மரவள்ளிக்கிழங்கு இருக்கா? அதை சாப்பிடப் பிடிக்காத பிள்ளைகளுக்குக் கூட இந்த புட்டு செஞ்சா ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க!

சிம்பிளா செய்யக்கூடிய இந்த மரவள்ளிக்கிழங்கு புட்டு, ஆரோக்கியத்துக்கும் சுவைக்கும் சிறந்தது. ஒரே முறை செஞ்சுப் பாருங்க… சாப்பிட்டவங்க மறக்க மாட்டாங்க!

தேவையான பொருட்கள்:

மரவள்ளிக்கிழங்கு – ½ கிலோ

ரவை – ¼ கப்

துருவிய தேங்காய் – 1 கப்

உப்பு – 1 சிட்டிகை

ஏலக்காய் தூள் – ½ டீஸ்பூன்

சர்க்கரை – ½ கப்

அரிசி மாவு – ¼ கப்

நெய் – 1 டீஸ்பூன்

முந்திரி – 10 (நறுக்கியது)

பாதாம் – 10 (நறுக்கியது)

செய்முறை:

மரவள்ளிக்கிழங்கை துருவி எடுத்துக் கொள்ளவும்.

அதில் ரவை, துருவிய தேங்காய், உப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும்.

அடுத்து சர்க்கரை, அரிசி மாவு சேர்த்து கைகளால் நன்றாக பிரட்டவும்.

பாத்திரத்தில் நெய் சூடாக்கி, நறுக்கிய முந்திரி, பாதாமை பொன்னிறமாக வறுத்து அதையே கலவையில் சேர்க்கவும்.

இட்லி தட்டில் வாழை இலையை விரித்து, நெய் தடவிய குழிக்கரண்டியால் கலவையை ஒவ்வொரு குழியிலும் போடவும்.

இட்லி பாத்திரத்தில் வைத்து சுமார் 5 நிமிடங்கள் ஆவியில் வேக விடுங்கள்.

அதுவும் ஓகே—சூப்பராக மணக்கும், மென்மையான மரவள்ளிக்கிழங்கு புட்டு ரெடி!

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More