இருண்ட நாளில்
இறந்த மனிதர்
உயிரும் வரும் பார்
பேயாகி பெயரோடு.
ஏழை வாழ்வு வாழ்ந்த
புலவனும் வாழ்வான்
இறந்த பின்னர் தான்
ஏட்டில் வழியே பாட்டாக.
காடு வளர்ந்து வாழ
வளர்ந்தவர் சொல்வார்
மரமரிந்து பணம் சேர்த்து
மாளிகையில் வாழ்ந்தபடி.
ஏட்டிக்கு போட்டி போட்டு
சொந்தம் தொலைத்து விட்டு
சொல்ல வருவார் உனக்கு
உறவின் உன்னதம் கேளடா.
பாதை மாறாத பாரில்
உனக்கென ஆக்கு பாதை.
வாழும் வழி கண்டு – நீ
வாழ்ந்து விட்டு போடா.
நொடிக்கு நொடி இருக்கு
நொண்டிச் சாட்டு இங்கே.
சகட்டு மேனிக்கு சாய்ந்து
காரியம் பெறுவார் நல்லபடி.
இயற்கை தந்த அறிவு
தேடிப் பார் இருக்கு
பாரில் விளைந்த உணவு
உனக்கென ஆனது போல்.
உடைந்த காலோடு
கால்நடையும் திரியும்.
புல்லை மேய்ந்து பாலை
கறக்க இசைந்து நிற்கும்.
துன்பம் கொண்ட போதும்
நன்மை மட்டும் செய்யும்.
கற்று வாழ காட்டுவார் – நீ
நம்பி விட்டால் போச்சு.
விம்மி அழுது நின்றாலும்
சொல்லால் கொல்வார்.
வஞ்சம் எல்லாம் செய்து
உன்னை விஞ்சியதாய் தான்.
மீண்டும் வந்து நான்
சொல்வேன் கேள் – நீ.
வாழும் வழியை தெரிந்திட
அடிபட்ட வலியால் தேடு.
என் பேச்சை கேட்டாலும்
உன் புத்திக்கு சொல்லு.
புரிந்தபடி நடந்திட துணிந்து
குனிந்த காலம் எறிந்து வாழ.
முடியும் இராப் பேயாக
மடியும் மனிதர் வாழ்வில்
இன்பம் கண்டு வாழும்
நல்ல வழிகளை தேட.
நதுநசி