எண்ணெய் வடியும் முகத்திற்கு முல்தானி மெட்டி பேஸ்பேக்!!

எண்ணெய் வடியும் பிரச்சினையானது முகத்தின் அழகினைக் கெடுத்துவிடும், எவ்வளவோதான் நாம் மேக்கப் போட்டாலும், அவை அத்தனையும் வீணாகிப் போய்விடும். இப்போது நாம் எண்ணெய் வடியும் முகத்தினை முல்தானி மெட்டியினைக் கொண்டு எவ்வாறு தீர்வு காண்பது என்று பார்க்கலாம்.

எண்ணெய் வடியும் முகத்திற்கு முல்தானி மெட்டி பேஸ்பேக்!!

தேவையானவை:

1.    முல்தானி மெட்டி- 4 டீஸ்பூன்

2.    ரோஸ் வாட்டர்- கால் டம்ளர்

3.    பாதாம் பருப்பு- 3

4.    முந்திரி- 3

செய்முறை:

1.    பாதாம் பருப்பு மற்றும் முந்திரியை தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

2.    இதனுடன் சிறிது தண்ணீர் விட்டு மிக்சியில் அடித்துக் கொள்ளவும்.

3.    இந்த பாதாம்- முந்திரி பேஸ்ட்டை முல்தானி மெட்டியுடன் கலக்கவும்.

4.    இந்தக் கலவையினை ரோஸ் வாட்டரில் நன்கு கலந்து, பிரிட்ஜில் வைக்கவும்.

இதனை எடுத்து முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் கழித்து கழுவவும். உங்கள் முகம் பளபளவென மின்னும்.

 

நன்றி : தமிழ்-ருவின்

ஆசிரியர்