செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஃப்ளைதுபாய் விமானிக்கு டுபாய் பட்டத்து இளவரசர் பாராட்டு

174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஃப்ளைதுபாய் விமானிக்கு டுபாய் பட்டத்து இளவரசர் பாராட்டு

1 minutes read

ஃப்ளைடுபாய் விமானத்தில் பயணித்த 174 பயணிகளின் உயிரை சாமர்த்தியமாக காப்பாற்றிய விமானி கேப்டன் ஸ்மித் மச்சரை, டுபாய் பட்டத்து இளவரசரும், துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் நேரில் சந்தித்துப் பாராட்டியுள்ளார்.

மனித உயிர்களைப் பாதுகாப்பதில் விமானி வெளிப்படுத்திய அபார துணிச்சல், பொறுப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை ஷேக் ஹம்தான் இதன்போது வெகுவாகப் பாராட்டினார்.

தமது சார்பிலும், ஐக்கிய அரபு அமீரகத் தலைமையின் சார்பிலும் கேப்டன் ஸ்மித் மச்சருக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்மதிப்பையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி – இஸ்ரேலுக்கு பயணித்த விமானத்தில் இந்திய விமானி மீது கத்திக்குத்து: விமானம் சவுதியில் தரையிறக்கம்

அத்துடன், அவர் தமது குழுவின் ஒரு அங்கமாகவும், தேச வரலாற்றின் ஒரு பகுதியாகவும் விளங்குவதுடன், அன்பு, அமைதி மற்றும் வாழ்வின் அடையாளமாக ஐக்கிய அரபு அமீரகம் முன்னிறுத்தும் மனிதநேயப் பண்புகளின் பிரதிபலிப்பாகவும் திகழ்வதில் தாம் பெருமையடைவதாக ஷேக் ஹம்தான் மேலும் தெரிவித்தார்.

174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஃப்ளைதுபாய் விமானிக்கு டுபாய் பட்டத்து இளவரசர் பாராட்டு

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.