செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் குளிர்காலத்தில் உதடு வறட்சிக்கு வீட்டிலேயே இயற்கை தீர்வுகள்

குளிர்காலத்தில் உதடு வறட்சிக்கு வீட்டிலேயே இயற்கை தீர்வுகள்

1 minutes read

குளிர்காலம் தொடங்கும் நேரத்தில் பலருக்கும் சரும வறட்சி மற்றும் உதடு வெடிப்பு போன்ற பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகின்றன. குளிர்ச்சியான காலநிலை மற்றும் வறண்ட காற்றின் தாக்கம் காரணமாக சருமத்தின் இயற்கையான ஈரப்பதம் குறைந்து, உதடுகள் வறண்டு வலியுடன் வெடிக்கும் நிலை உருவாகிறது. குறிப்பாக பனிப்பொழிவு அதிகரிக்கும் காலங்களில் இந்த பிரச்சனை வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது.

இந்த நிலையில், அதிக விலை கொடுத்து லிப் பாம் வாங்க வேண்டிய அவசியமில்லை. வீட்டிலேயே எளிதாக கிடைக்கும் இயற்கை பொருட்கள் உதடுகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகின்றன. கற்றாழை ஜெல் உதடுகளில் ஏற்பட்ட வறட்சியையும் வெடிப்புகளையும் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு தன்மை சேதமடைந்த உதடுகளை ஆற்றுகிறது. தூய கற்றாழை ஜெல்லை நேரடியாக பயன்படுத்தலாம் அல்லது பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தலாம். குறிப்பாக இரவு நேரத்தில் பயன்படுத்தினால் சிறந்த பலன் கிடைக்கும்.

தேங்காய் எண்ணெய் உதடுகளுக்கு இயற்கையான ஈரப்பதத்தையும் ஊட்டச்சத்தையும் வழங்குகிறது. தினசரி சிறிதளவு தேங்காய் எண்ணெயை தடவுவதால் குளிர்கால வறட்சி குறையும். மேலும் வாரத்திற்கு ஒரு முறை தேங்காய் எண்ணெயுடன் சிறிதளவு சர்க்கரை கலந்து மெதுவாக தேய்த்தால் இறந்த செல்கள் நீங்கி உதடுகள் மென்மையாகும்.

தேன் உதடுகளை நீண்ட நேரம் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். தேனை கிளிசரினுடன் கலந்து இயற்கை லிப் பாம் போல பயன்படுத்தலாம். அதேபோல், க்ரீன் டீ பயன்படுத்திய பின் அதன் டீ பேக்கை உதடுகளில் சில நிமிடங்கள் வைத்தால் வறட்சியால் ஏற்படும் எரிச்சல் குறையும்.

மேலும், கொக்கோ பவுடரை பயன்படுத்தி வீட்டிலேயே இயற்கை லிப் பாம் தயாரிக்கலாம். ஆலிவ் வேக்ஸ், தேங்காய் எண்ணெய், கொக்கோ பவுடர், ஜொஜோபா ஆயில் மற்றும் சில துளிகள் டீ ட்ரீ ஆயிலை கலந்து தயாரிக்கும் இந்த கலவை உதடுகளை நீண்ட நேரம் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். இதை பகல் மற்றும் இரவு நேரங்களில் பயன்படுத்தலாம்.

⚠️ கவனிக்க: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன. எனவே, எந்தவொரு தகவலையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.