Sunday, May 9, 2021

இதையும் படிங்க

நம் காதல்! | கவிதை

உயிரெழுத்து நீயானாய்.மெய்யெழுத்து நானானேன்.இருவரும் சேர்ந்தோம்,உயிர்மெய் எழுத்தானது நம் காதல்!அதனால் தானோ,ஆய்(யு)த எழுத்தாய்உன் அப்பா! நன்றி : சுவடுகள்

உதிரும் மலர்கள் I சி்.கிரிஷாந்த்ராஜ்

‘சிகிச்சை பலனின்றிகாலமானார்’ என்பதுபரீட்சயமாகிவிட்டது!‘சாகுற வயசா’ என்பதைகேட்டுக் கேட்டுச்சலித்துவிட்டது! ‘திடீர்னு என்னாச்சு’வியப்பதற்கு புதிதல்ல!‘நல்லாத்தானே இருந்தார்’எத்தனை பேருக்குத்தான்இதையே சொல்வது?

ரஜினியின் நடிப்பில் பொதிந்திருக்கும் கலைத்தன்மை I தமிழ்பிரபா

நண்பர்களுடனான மதுக்களிப்பில் நான் அதிகம் பேசுபவைகளுள் ஒன்று “ரஜினியின் நடிப்பில் பொதிந்திருக்கும் கலைத்தன்மை”. மேற்கூரியது போன்ற கட்டுக்கோப்பான சொற்களில்...

இணுவையூர் மயூரனின் ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம் | ஓர் அறிமுகம்

மண்ணும் அதன் வாசமும் ஒருவனால் சுவாசிக்கப்படுகையில் அவனை தாலாட்டுகிற இயற்கை கூடவே வந்து குந்தியிருந்து பலகதைகள் சொல்லி மகிழ்வூட்டும்.அதே இயற்கை அவனை கைப்பிடித்து...

நிலவும் அவனும் | கவிதை |உஷா விஜயராகவன்

பேரழகு பொருந்தியமங்கை தான்  நிலவோ....சுடர்விழியால் இவனை தீண்டிஅணைத்துக் கொண்டாளோநிலா மங்கை....இதன் வெளிப்பாடுஇவனது இசையோ...இவனது இசையில்மயங்கிபிறைதேடும்பனித்துளிபோல்பரவசத்தில் நாணுகிறாள்...நிலவு எனும் தூயசொருபிணிநித்தம் வருவதுஇவனது இசைக்காகவா!இவனது அழகிற்காகவா!நிலவே இவனிடம்மயங்கும்போதுஇவனை ஈன்ற தாய்நான் என்ன! நாம்...

ஏமாற்றம் | சிறுகதை | முஹம்மது இனியாஸ்

அந்தி பொழுது... ஆதவன் அணையும் நேரம்... கடற்கரையில் மக்கள் எல்லோரும் கூடி மகிழ்ச்சியாய் இருக்கக்கூடிய தருணம். சூரியன் காலையிலிருந்து முயற்சி செய்து தன்...

ஆசிரியர்

முரட்டுக்காளை | சிறுகதை | ஏ.கல்யாணசுந்தரம்

“தாத்தா… தாத்தா… டோக்கன் வாங்கிட்டேன். நாளைக்கு பதினோரு மணிக்கு நாம அங்க இருக்கணும்.” என்று சந்தோஷமாக ஓடி வந்தான் கணேசன்.

“அப்படியா, சரிப்பா கணேசா, ஆனா காலைலயிருந்து மருது கத்திகிட்டே இருக்கான்.. என்னான்னே தெரியல.”

“தண்ணி வச்சீங்களா, தீனி போட்டீங்களா..?” என்றான் கணேசன்..

“எல்லாம் வைச்சாச்சு, ஆனாலும் கத்துறான். கண்ணு பக்கத்துல ஏதோ அடி பட்டிருக்கு.. டாக்டர வர சொல்லிருக்கேன்..” என்று தாத்தா சொன்னவுடன் பதறி அடித்து மருதுவிடம் ஓடினான் கணேசன்.

பதினொன்றாம் வகுப்பு படிக்கும் கணேசனும், அவன் தாத்தா ராமசாமியும் வளர்க்கும் சல்லிக்கட்டுக் காளை மருது. சற்று வறுமையில் இருந்தாலும் தங்கள் குடும்ப உறுப்பினராக நினைத்து மருதுவின் தீவனத்திற்கும் இதர செலவினங்களுக்கும் குறைவில்லாமல் செய்து வந்தனர்.

கால்நடை மருத்துவர் வந்து பார்த்துவிட்டு..

“ஐயா, கண்ணுக்கு பக்கத்துல ஏதோ குத்தியிருக்கு .. மருந்து போட்டிருக்கேன் சரியாயிடும்” என்றார்..

“சார், நாளைக்கு மேலூர்ல்ல ஜல்லிக்கட்டு.. போலாமா” என்றான் கணேசன்..

“இல்லப்பா வேண்டாம்.. மாடு அடிக்கடி இடது கண்ண கொஞ்சம் மூடுது… இடது பக்கத்துலயிருந்து யாராவது வந்தா அவனுக்கு சரியா தெரியாது.. இரண்டு மூணு நாள்ல சரியாயிடும் அப்பறம் போகலாம்..” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் மருத்துவர்.

“கணேசா, மருதுக்கு கண் சரியாகட்டும், அடுத்த வாரம் நல்லூர் ஜல்லிக்கட்டுக்கு போயிக்கலாம்” என்று தாத்தா சொல்லவும், வருத்தத்துடன் அமர்ந்தான் கணேசன்.

அடுத்த நாள் காலை 5:30 மணி..

தாத்தா எழுந்து, அருகில் கணேசன் இல்லாததைப் பார்த்து சிந்தனையுடன் வெளியே வந்தார். வாசலில் மருதுவும் இல்லை என்றவுடன் சற்றே பதற்றத்துடன் சுற்றும் முற்றும் தேடினார்..

சற்று துாரத்தில், மருதுவின் இடது புறத்திலிருந்து கணேசன் நடந்து வர மருது செல்லமாக தனது திமிலை அசைத்துக் கொண்டிருந்தது.

தாத்தாவை பார்த்து ஆனந்தமாய் ஓடி வந்த கணேசன், “தாத்தா, மருதுக்கு இடது பக்கத்துலயிருந்து வந்தாலும் நல்லா தெரியுது தாத்தா.. காலைல நாலு மணியிலிருந்து பழக்கிக்கிட்டுருக்கேன்..இன்னைக்கு போலாம் தாத்தா, நீங்க வேணா நின்னு பாருங்க..”

தாத்தா மருதுவின் பின்னிருந்து இடப்புறம் வர மீண்டும் செல்லமாக தனது திமிலை அசைத்தது மருது.

“போலாம் தாத்தா, மருது கண்டிப்பா ஜெயிப்பான்” என்றான் கணேசன் உறுதியுடன்..

தாத்தா அரை மனதுடன் தலையசைத்தார்..

மேலூர் சல்லிக்கட்டு திடல்.

காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை அற்புதமாகப் பிடித்த வீரர்கள் மற்றும் யாருக்கும் அடங்காத காளைகள் என்று விளையாட்டுச் சிறப்பாக நடைபெற்றது.

கணேசன் தங்களது சுற்றுக்காக ஆவலுடன் காத்திருக்கும்போது..

அடுத்தது வண்டியூர் ராமசாமி காளை மருது என்று அறிவிக்கப்பட்டது..

மருது அவிழ்க்கபட்டு, கூட்டத்தின் ஆரவாரத்தின் நடுவே கம்பீரமாக நடந்து யாருக்கும் சிக்காமல் சுற்றி வந்தது..

அதிக காளைகளை அடக்கிய வீரர் ஒருவர் மருதுவின் இடப்புறமாக வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் திமிலைப் பிடித்து ஏற.. கணேசன் சற்றே இறுக்கமானான்..

ஆனால், மருது சுதாரித்துக்கொண்டு அந்த வீரனை அனாயாசமாகத் தூக்கி எறிந்தது. அடுத்த சில வினாடிகள் மருதுவை யாரும் நெருங்க முடியாததால்.. மருது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டது. மேலும், மருது அதிக நேரம் யாராலும் அடக்க முடியாமல் மற்றும் அதிக சுற்று சுற்றி வந்ததால் போட்டியில் முதல் இடம் பிடித்தாக மருதுக்கு 3 பவுன் தங்கச் சங்கிலியும் வழங்கப்பட்டது.

கணேசன் சந்தோஷமாக மருதுவை கட்டி அணைத்தபடி தாத்தாவிடம், “தாத்தா.. நீங்க மருத கூட்டிட்டு வீட்டுக்கு போங்க, நான் மதுரைக்கு போய் அக்கா கிட்ட இந்த செயின குடுத்துட்டு வர்றேன்.” என்றான்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணமான அவன் சகோதரிக்கு அந்தச் சங்கிலியை வழங்க வேகமாக ஓடிய கணேசனை பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டே தாத்தா மருதுடன் நடந்தார்.

மருது எல்லாவற்றையும் உணர்ந்தது போல் கம்பீரமாக நடந்தது.

நிறைவு..

நன்றி : ஏ.கல்யாணசுந்தரம் | சிறுகதைகள்.காம்

இதையும் படிங்க

புலித்தாய் | கவிதையும் ஓவியமும்

கோயில் படிகளில்தேடுகிறோம் தெய்வத்தைவீட்டின் மூலையில்ஒரு சமையலைறையில்ஒளித்து வைத்து.அன்னைஒரு புலியாகவும் மாறுவாள்தன் குழந்தையை காக்க.நிகரற்ற பாசத்தைஊட்டும் அன்னை என்ற தெய்வம்எங்கும் எதிலும் நிறைந்த பூமி...

தாமரைச்செல்வி சிறப்பிதழாக ஞானம் இலக்கிய இதழ்

இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகின்ற ஞானம் கலை இலக்கிய இதழின் மே மாத இதழானது வன்னியின் மூத்த எழுத்தாளர் தாமரைச்செல்வியை அதிதியாக கொண்டுள்ளது.

வீட்டின் நியமம் | க. சம்பத்குமார் கவிதை

ஒரு சிறுவனால்தனதினிய விருப்பங்களைஅவ்வளவு சுலபமாகவீட்டிற்கு அழைத்துவர முடிவதில்லை நாடகத்தைப் போன்றவிளையாட்டுகளைமந்திரக்காரனைப் போலசாகச வித்தைகளைகுழந்தை விரும்பி நிகழ்த்தும்பறவையின் குரலைகடலின் ஒலத்தை...

காதலிரவு | கிரி கவிதை

நெருக்கப் பசி தீரும்தொலைவு தொலையும்கருமை பூசிய பொழுதில்துள்ளிக் குதிக்கும்முயல் குட்டிகளைகரங்களும் உதடுகளும்அள்ளித் தழுவிஆனந்தக் கூத்தாடட்டும்! நிசப்த அர்த்தமறியாஇரு மூச்சின்...

விடியும் பொழுது | சிறுகதை | விமல் பரம்

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து திடுக்கிட்டு கண் விழித்தேன். இடி மின்னலோடு மழை பெய்து கொண்டிருந்தது. சத்தத்தில் கலைந்து விட்ட உறக்கம் மீண்டும் என்னை...

தொடர்புச் செய்திகள்

விடியும் பொழுது | சிறுகதை | விமல் பரம்

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து திடுக்கிட்டு கண் விழித்தேன். இடி மின்னலோடு மழை பெய்து கொண்டிருந்தது. சத்தத்தில் கலைந்து விட்ட உறக்கம் மீண்டும் என்னை...

ஏமாற்றம் | சிறுகதை | முஹம்மது இனியாஸ்

அந்தி பொழுது... ஆதவன் அணையும் நேரம்... கடற்கரையில் மக்கள் எல்லோரும் கூடி மகிழ்ச்சியாய் இருக்கக்கூடிய தருணம். சூரியன் காலையிலிருந்து முயற்சி செய்து தன்...

தாகமும் தீரும் | சிறுகதை | விமல் பரம்

“எத்தனை தடவை சொல்லீட்டன் நீ அங்க போறது எனக்குப் பிடிக்கேலை… வேண்டாம்” கணவனின் குரல் கேட்டுத் திரும்பினாள் நித்தியா.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மென்மையான மற்றும் மிருதுவான கைகள் வேண்டுமா

சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் மிகவும் அழகான பகுதி கைகள் என்றே கூறலாம். ஆனால், கைகள் பராமரிப்பிற்கு அவ்வளவாக யாரும்...

நிலவும் அவனும் | கவிதை |உஷா விஜயராகவன்

பேரழகு பொருந்தியமங்கை தான்  நிலவோ....சுடர்விழியால் இவனை தீண்டிஅணைத்துக் கொண்டாளோநிலா மங்கை....இதன் வெளிப்பாடுஇவனது இசையோ...இவனது இசையில்மயங்கிபிறைதேடும்பனித்துளிபோல்பரவசத்தில் நாணுகிறாள்...நிலவு எனும் தூயசொருபிணிநித்தம் வருவதுஇவனது இசைக்காகவா!இவனது அழகிற்காகவா!நிலவே இவனிடம்மயங்கும்போதுஇவனை ஈன்ற தாய்நான் என்ன! நாம்...

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

21 ஆண்டுகளுக்கு பின் பிரபல நடிகருக்கு ஜோடியாக!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பிரபலமானார். இவருடைய நடிப்புக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே...

கொரோனாவின் கோலாட்டம்: 4 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

டெல்லி: கொரோனா நிலவரம் தொடர்பாக 4 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்றும் நாளையும் ஆலோசனை நடத்துகிறார். பிரதமர் மோடி ஒவ்வொரு மாநில முதல்வர்களுடன் தனிதனியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு...

பண்டாரவளை நகர பொதுச்சந்தை மூடல்- தீவிர கண்காணிப்பு!

இந்நிலையில், அப்பகுதியில் சுகாதார அதிகாரிகளும் பொலிஸாரும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு சந்தை மூடப்பட்டிருந்தாலும் இன்று காலை...

அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாமக்கல் கவிஞர் மாளிகையில் இடம்பெற்றது. இதில் 33 அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் நாளை முதல்...

இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கு மலேசியா பயணத்தடை!

இதன்படி, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மே எட்டாம் திகதி முதல் மலேசியாவிற்குள் உள்நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு!

கொரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (திங்கட்கிழமை) காலை 4 மணி முதல் வருகிற 24ஆம் திகதி காலை 4 மணி வரை...

துயர் பகிர்வு