
நான் ஒரு கற்பனை மகளை வளர்க்கிறேன்
மகள்களை வளர்க்கத் தெரியா அப்பாக்களுக்கும் அம்மாக்களுக்கும் வகுப்பெடுக்கத் துணிகிறேன்
மகளும் நானும் நண்பர்களாகி பல காத தூரம் நடப்போம்
மகளும் நானும் தெய்வமாகி பூமியின் இறுதிவரை செல்வோம்
மகளும் நானும் கடவுளாகி
அதிசயங்கள் பற்றி விவாதிப்போம்
மகளிடம் நான் தோற்றால்
பெருமை கொள்வேன்
மகள் என்னை விட
அறிவாளியானாள் என
மகளை விட பயந்தால் மகிழ்வேன்
மகள் என்னை விட
வீராங்கனை ஆனாள் என
பிறக்காத என் மகள் பற்றி கற்பனையில் அத்திவார மிட்டு மாளிகையை நட்டுவிட்டேன்
மகள் பிறந்தால் அவளே ராணி
மகள் புன்னகைத்தால் அதுவே பூ
மகளைக் காணுங் கணமதில்
சுயநலனைத் தொலைத்தேன்
வாழ்வின் வசந்தங்கள் போதுமென முற்றுப்புள்ளியை நிறுத்தினேன்
இப்போதெல்லாம் என் பயணம் மெதுவாய்த்தான்
…………………….
……………………
மகளைத்தேடி
மகள்
……..எந்தன் குருதி
மகள்
……..எந்தன் தாய்
மகள்
…….எந்தன் தெய்வமென நம்புகிறேன்.
த.செல்வா
நேரம் 10.15
டிப்போ