
ஒருநாள் சூரியன் பூமிக்கு இறங்கி வந்தான்!
திறந்த விளையாட்டு மைதானம்,
ஆட்களற்று வெறுமையானது.
மாணவர்கள் எங்கும் இல்லை!
பறவைகள் அற்ற வனாந்தரமாய்,
தாயில்லாப் பிள்ளை போல்,
தனிமையில் கிடந்தது பாடசாலை.
மரங்கள் நிழல்களைத் தின்று,
ஏப்பம் விட்டுக்கொண்டிருந்தன.
காகிதப் பறவைகள்,
காற்றில் சிறகு விரித்துப் பறந்தன.
தூசி படிந்த பள்ளி மணி,
அடிப்பாரற்று அநாதையாயிருந்தது.
துண்டிக்கப்பட்ட இலைகள்,
காற்றின் அந்தரத்தில் நடம்புரிந்தன.
பள்ளிகளைப் போர் சூழ்ந்த பின்னொரு நாளில்,
வகுப்பறை நாற்காலிகளை,
கண்ணீர் பூக்கள் நிறைத்தன.
கரும்பலகைகள் மழையில் நனைந்தன.
மற்றும், மணிகள்,
தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தன.
-தியா-