உலகை ஏக்கத்தோடு
உற்று நோக்கினும்
ஏக்கத்தோடு திரும்பும்
ஏழை மனதைப் போல்.
விலங்கு உடைந்து கரம்
காற்றில் அசைதல்;
கனவென்று போகிணும்
விடுதலைக்கு முயற்சி.
சோர்ந்து போகும்
வகையில் ஆயிரம்
நிகழ்வுகள் நடந்திட;
கவலைகள் நீ மறந்திடு.
அடிமேல் அடி வைத்து
அம்மியை தூக்கி நட.
அடி வைத்து நகர்த்திட
நகரும் அம்மியும் பார்.
சிறு கோடாலி கொண்டு
பெரும் புளியமரம்
தறித்தல் முடியாதோ?
முயன்று பார் மரம் முறியும்.
தனக்குத் தேவையொன்று
இருப்பின் வரும் வலிந்து.
இது புரிந்து நீயும் நட
தேவையாவதற்கு தகுதி.
மற்றார் நட்பு வேண்டும்
மரணம் வரையிலும்.
அவர் நாணமுள்ள நல்ல.
மனிதராக வேண்டும்.
நதுநசி