ஏளனமாக பார்க்கும் எறும்புகள்: மனுஷ்ய புத்திரன்

மீதமாகிவிட்ட ஒரு துண்டு இனிப்பை
எங்கே வைப்பது என்று தெரியவில்லை
எங்கே வைத்தாலும்
எறும்பு வந்துவிடும்

பலவாறாக யோசித்தும்
எறும்பிடமிருந்து இனிப்பைக்காப்பாற்ற
எந்த வழியும் தெரியாததால்
கடைசியில் நானே அந்த இனிப்பை
திகட்டத் திகட்ட தின்று முடித்துவிட்டேன்

பசித்த நான்கு எறும்புகள்
சுவர் இடுக்குகளிலிருந்து
ஏளனமாக என்னையே
உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கின்றன
மனுஷ்ய புத்திரன்

ஆசிரியர்