செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் ‘வீணாவக் ரெகென கிய தருவா…’ | சிங்களத்தில் ஈழக் கதைகள்

‘வீணாவக் ரெகென கிய தருவா…’ | சிங்களத்தில் ஈழக் கதைகள்

0 minutes read

சரத் ஆனந்தவின் மொழியாக்கத்தில் ஈழத் தமிழ் படைப்பாளிகள் பத்துப் பேரின் சிறுகதைகள் அடங்கிய சிங்கள மொழிபெயர்ப்புத் தொகுப்பில் தனது ‘யாழ் சுமந்த சிறுவன்’ கதையும் இடம்பெறுவதாகவும் அத்துடன் யாழ் சுமந்த சிறுவன் கதையின் பெயரே ‘வீணாவக் ரெகென கிய தருவா…’ என தொகுப்பின் பெயராகவும் இடப்பட்டுள்ளதாகவும் கவிஞர் தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.

இச் சிறுகதை தொகுப்பில் ஈழத் தமிழ் எழுத்தாளர்களான தீபச்செல்வன், முருகன் சிவலிங்கம், ஆர்.எம். நவ்சாத், சயந்தன் கதிர், ராஜேஸ்கண்ணன் இராஜேஸ்வரன், எம். ரிசான் செரீப், சோபாசக்தி, உமா வரதராஜன், அழகு சுப்பிரதணியம், மல்லிகை சி. குமார் ஆகியோரின் கதைகள் உள்ளடங்குகின்றன.

கடுல்ல பதிப்பகம் வெளியிடும் இந்த நூலின் வெளியீடு எதிர்வரும் டிசம்பர் 25ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக மொழிபெயர்ப்பாளர் சரத் ஆனந்த தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.