22
வாழ்வு எனும் மூன்றெழுத்து
வளமாக வாய்த்திடவே
அன்பு எனும் மூன்றெழுத்து ஒளிகொண்டு
இருள் என்ற மூன்றெழுத்து
வாழ்வில் இடம் பிடித்து விடாமல் எாிகின்ற
தீபம் எனும் மூன்றெழுத்து
வெற்றி எனும் மூன்றெழுத்தை
விடாமல் பிடித்துவிட என்னை விளைவித்த
சக்தி எனும் மூன்றெழுத்து
அது என் அன்னை!
நன்றி : கலாநிதி தனபாலன் | வார்ப்பு இணையம்
