செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் ரோஜாபூவில் உள்ள மருத்துவ குணங்கள்.

ரோஜாபூவில் உள்ள மருத்துவ குணங்கள்.

1 minutes read

 

ரோஜா  பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பிறகு வாய் கொப்பளிக்க வாய்ப்புன் ஆறும் புண்களை கழுவி வர சதை வளர்ச்சி குறைந்து புண்கள் ஆறும்.

பூவுடன் சீனா கற்கண்டு சேர்த்து சிறிது தேன் கலந்து பிசைந்து ஒரு வாரம் வெளியில் வைக்க குல் கந்து ஆகும். காலை – மாலை சாப்பிட்டு வர மலச்சிக்கள் – உதிர பேதி – வெள்ளை – வெட்டை தீரும் . தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் – கல்லீரல் – இதயம் – இரைப்பை – சிறு நீரகம் – குடல் ஆகியவற்றிற்கு பலம் உண்டாகும். உடல் ஆரோக்கியமாகும்.

பாலில் ரோஜாப்பூ இதழ்களை போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டால் சளி நீங்கும். ரத்தம் விருத்தி அடையும்.

ரோஜா மொக்கு – நில வாகை – சுக்கு – கிராம்பு ஆகியவை சம அளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பெரியவர்களுக்கு ஒரு அவுன்ஸ் – சிறுவர்களுக்கு அரை அவுன்ஸ் குழந்தைகளுக்கு கால் அவுன்ஸ் கொடுத்தால் நன்கு பேதியாகும். ஞாபக சக்தி உண்டாகும்.

மலர்ந்த ரோஜா பூக்களின் இதழ்களை படிக பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு ஓர் இரவு ஊற வைத்து மறுநாள் வாலையில் இட்டு முறைப்படி தீநீர் வாங்குவதே அசல் பன்னீர் ஆகும். ஆயிரம் பூக்களுக்கு அரைலிட்டர் பன்னீர் கிடைக்கும். ஒரு லட்சம் பூக்களைப் போட்டு எடுக்க சுத்தமான அத்தர் கிடைக்கும். உள்ளே சாப்பிட உடல் குளிர்ச்சி அடையும். மனதுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். இனிப்பு பலகாரங்களில் தெளிக்க காப்பிடுவதற்கு இனிமையாக இருக்கும்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.