நம் உடல் உறுப்புகளில் இதயம் என்பது மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. எந்தவொரு செயல்களிலும் இதயத்தை சம்பந்தப்படுத்தி சொல்லாதவை என்று எதுவும் இல்லை.
மேலும் தினமும் இதயத்திற்கு வலிமை கொடுக்கும் ஆரோக்கியமான உணவுப் பொருட்களை சாப்பிட்டு வந்தால் இதயம் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.
பெர்ரி பழங்கள்
பெர்ரி பழத்தை சாப்பிட்டால் இதிலுள்ள சத்துகள் இதயத்தில் சேரும் கெட்ட கொழுப்புகளை நீக்கி, கல்லீரலுக்கு அனுப்பி விடுகிறது. இதனால் இதய அடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது.
பீன்ஸ்
பீன்ஸ் வகை காய்களில் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடென்ட், ஒமேகா 3 ஃபேட்டி அமிலம், பி காம்ப்ளக்ஸ் ஆகிய சத்துக்களைக் கொண்டுள்ளது. எனவே அனைத்து வகையான பீன்ஸ் விதைகள் இதயத்திற்கு வலிமை சேர்க்கும்.
வால் நட்
வால் நட்டில் அதிக நார்ச்சத்துகள் இருப்பதால், இது இதயத்திற்கு மிகவும் நல்லதாக உள்ளது. குறைவான கொழுப்புச் சத்துகள் உள்ளதால், ரத்த செல்களை சீராக வைக்க உதவுகிறது.
சால்மன் மீன்
சால்மன் மீனில் ஒமேகா 3 உள்ளது. எனவே வாரம் ஒரு முறை இந்த சால்மன் மீன் சாப்பிடுவதால், நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைந்து, ரத்த உற்பத்தியை அதிகரிக்கச் செய்து இதய நோய்கள் வராமல் தடுகிறது.
தர்பூசணி
தர்பூசணியில் இதயத்திற்கு பலம் சேர்க்கும் விட்டமின்கள் A, C, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் உள்ளது.
மேலும் இந்த தர்பூசணி பழத்தில் லைகோபீன் என்ற நிறமி இருப்பதால், தர்பூசணியை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம், நமது உடலில் சிட்ருலின் என்ற பொருளை சுரக்கச் செய்து, இதயபுற்று நோய்கள் வராமல் தடுக்கச் செய்கிறது.
யோகார்ட்
யோகார்ட் ஈறுகளை பலப்படுத்தும். இது சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடென்டுகள், விட்டமின்கள் மற்றும் நார்சத்துக்களை அதிகமாக கொண்டுள்ளது.
எனவே நாம் தயிரை உணவில் சேர்த்துக் கொண்டால் ஈறுகள் பலவீனம் அடைவதை தடுத்து, இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
தக்காளி
தக்காளியில் விட்டமின் A, C, மற்றும் லைகோபீன், ஆன்டி ஆக்ஸிடென்டுகள் போன்ற சத்துகள் அதிகமாக உள்ளது. எனவே தக்காளியை தினமும் நம் உணவில் சேர்த்துக் கொண்டால் இதயம் வலிமையாக இருக்கும்.
அவகேடோ
அவகாடோவில் பொட்டாசியம், விட்டமின் C, நார்சத்து மற்றும் கரோடினாய்டு ஆகியவை அதிகமாக கொண்டுள்ளது. எனவே இது கரோடினாய்டு இதய பாதிப்புகள் வராமல் தடுக்கிறது.