Sunday, June 26, 2022

இதையும் படிங்க

துத்தி மூலிகையின் மருத்துவ பயன்கள்

துத்தி மூலிகை பொதுவாக இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. துத்தி இலை, அழற்சியைப் போக்கும்; மலக்கட்டு, ஆசனவாய் எரிச்சல் ஆகியவற்றை குணமாக்கும். நோய்...

ஆப்பிளை எந்த நேரத்தில் சாப்பிடலாம்…

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் என்பது டாக்டர்களின் பரிந்துரையாக இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் தன்மை ஆப்பிளுக்கு...

சீரகத்தினால் ஏற்படும் நன்மை

சமையலுக்கு பயன்படும் சின்னசீரகம் உடல் ஏற்படும் சிறுநீரக பிரச்சனையால் கால்கள் வீங்கிவிடும். இந்த வீக்கத்தை குறைக்க ஒரு தேக்கரண்டி காட்டு சீரக சூரணம் எடுத்து,...

கைகள் குளிர்ந்து போய் இருக்கிறதா?

குளிர்காலத்தில் பொதுவாக கைகள் குளிர்ந்த நிலைக்கு மாறிவிடும். ஆனால் சிலருக்கு எப்போதுமே கைகள் குளிர்ந்துபோய் இருக்கும். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ரத்தசோகை,...

ஆப்பிளை விட சக்தி வாய்ந்த நெல்லிக்காய்

வேறு எந்த வகை காய்கறி, பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் 'சி' 600 மில்லி கிராம் உள்ளது. கால்சியம் 50 மில்லிகிராம்,...

ராம்சே ஹன்ட் சின்ட்ரோம் எனப்படும் முக வாத நரம்பியல் பாதிப்பிற்கான சிகிச்சை

இன்றைய திகதியில் உலகின் பிரபலமான பொப் இசை பாடகரும், மேலைத்தேய இசை கலைஞருமான ஜஸ்டின் பீபர் என்ற இசைக் கலைஞருக்கு ஏற்பட்டிருக்கும் அரிய பாதிப்பு காரணமாக ராம்ஸே ஹன்ட் சின்ட்ரோம்...

ஆசிரியர்

சுளுக்கு என்பதென்ன

நாம் நம் கடந்து வந்த பகுதி வாழக்கையில் இந்த வார்த்தையை பிறர் மூலம் கேட்டோ அல்லது நாமோ உணர்ந்து வந்து இருப்போம். கால் சுளுக்கு என்றால் என்ன, சுளுக்கு உடலில் எந்தப் பகுதியை பாதிக்கும், இதை எப்படி தவிர்ப்பது, வந்த பின் அதற்குத் தகுந்த மருத்துவம் செய்வது எப்படி என்று இங்கே காணலாம்.

இந்த சுளுக்கு உடலில் உள்ள எந்த பகுதியைப் பாதிக்கிறது என்றால் உடம்பில் அனைத்து மூட்டுகளிலும் உள்ள ஜவ்வு பகுதியைப் பாதிக்கிறது. உடம்பில் அனைத்து மூட்டுகளிலும் அமைந்து உள்ள இந்த ஜவ்வு பகுதியை ஆங்கிலத்தில் லிகமென்ட் என்று அழைக்கின்றோம்.

இந்த ஜவ்வு – லிகமென்ட்(ligament), மூட்டுகளுக்கு உறுதியை அளித்து, வலுவை கூட்டி தேவை அற்ற இயக்கங்களைத் தவிர்த்து, மூட்டுகளை காயங்களில் இருந்து பாதுகாக்கிறது. இந்த சிறந்த பணியைச் செய்யும் ஜவ்வுகள் சில நேரங்களில் ஏற்படுத்தும் காயங்கள் மிகுந்த சிரமங்களைத் தரலாம். உடம்பில் உள்ள கணுக்கால் மூட்டு, முழங்கால் மூட்டு, மணிக்கட்டு, தோள்ப்பட்டை, முழங்கை மூட்டு போன்ற பகுதிகளில் உள்ள இந்த ஜவ்வுகள் எளிதாய் காயங்களுக்கு உள்ளாகலாம்.

சவ்வுகளில் காயங்கள் ஏற்பட சில காரணங்கள்,

  1. வலுவற்ற ஜவ்வுகள் எளிதில் காயங்களுக்கு உள்ளாகலாம்.
  2. போதிய பயிற்சிகள் அற்ற ஜவ்வுகள் .
  3. திரும்ப திரும்ப உபயோகிக்கும் போது
  4. சரியான பாதுகாப்பற்ற காலணிகள் அணியும் போது
  5. வெளிச்சம் குறைவான பாதை, பார்வைக் குறைபாடு, கரடு முரடான பாதைகளில் நடக்கும் போது

இப்படி சவ்வுகளில் ஏற்ப்படும் காயங்களை மருத்துவர்கள் காயத்தின் வீரியங்களை கொண்டு மூன்று நிலைகளாக பிரிக்கின்றனர். இந்த நிலைகளை கொண்டே குணப்படுத்தும் முறைகளும் மாறுபடுகிறது.

முன்று நிலைகள்

  1. முதல் நிலை – சிறிய காயம்
  2. இரண்டாம் நிலை – ஜவ்வு சிறிதே கிழிந்த நிலை
  3. மூன்றாம் நிலை – ஜவ்வு முற்றிலும் கிழிந்த நிலை.

முன்பு கூறியது போல முதல் இரண்டு நிலைகளும் மருந்தின் மூலமும், இயன்முறை மருத்துவத்தின் மூலமும் எளிதாய் குணப்படுத்தும் நிலை ஆகும். இந்த இரண்டு நிலைகளைக் குணப்படுத்த ஜவ்வுக் காயங்களை உறுதி செய்த பின்பு, ஐஸ் மூலம் ஒத்தடம் கொடுப்பது சிறந்த மருந்து. அதாவது இதனை ஆங்கிலத்தில் கிர்யோதேரபி(cryotherapy) என்பார்கள்.

கிர்யோதேரபி என்றால் நோய்களை மருந்து இல்லாமல் ஐஸ் மூலம் குணப்படுத்தும் முறை. அதாவது ஜவ்வில் காயங்களை மருத்துவர் மூலம் உறுதி செய்த பின் குறைந்தது நாள் ஒன்றுக்கு மூன்று முறை முதல் இரண்டு நாட்களுக்கு ஐஸ் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதனைச் செய்யும் போது, ஐஸ் கட்டியை எடுத்துக் கொண்ட பின் அதனை பிளாஸ்டிக் பையில் அடைத்து அடிபட்ட பகுதியில் ஒத்தடம் அல்லது ஐஸ் கட்டியை கைக்குட்டைக்குள் போட்டு அடிபட்ட பகுதியில் மேலே தடவுவதின் மூலமும் ஒத்தடம் கொடுக்க வேண்டும் குறைந்தது பதினைத்து நிமிடங்கள் அளிப்பது தகுந்த பயனைத் தரும்.

இப்படி ஐஸ் ஒத்தடம் கொடுக்கும் போது காயங்களால் ஏற்படும் அழற்சி inflammation தடுத்து நிறுத்தப்படுவதோடு, ஜவ்வில் ஏற்ப்பட்ட காயம் எளிதில் குணமாக உறுதுணையாக இருக்கும்.

முதல் இரண்டு நாட்கள் கடந்த பின் தகுந்த இயன்முறை மருத்துவம் மேற்கொள்வதன் மூலம் காயம் அடைந்த சவ்வின் வலுவை திரும்பப் பெற முடியும். மூன்றாம் நிலை சற்றே மோசமான நிலையாக இருப்பதால் மருத்துவர்கள் இதனை அறுவை சிகிச்சை மூலமே சரிசெய்ய முடியும்.

அதாவது கிழிந்த சவ்வின் பகுதிகளை நீக்கி விட்டு பின்பு கிழிந்த பகுதிகளை அறுவை சிகிச்சை மூலம் தைத்து காயங்களைச் சரி செய்வார்கள். இதற்குப் பிறகு குறைந்தது ஆறு முதல் எட்டு வாரங்கள் இயன்முறை மருத்துவர் ஆலோசனைப்படி பயிற்சிகளை மேற்கொண்டால், கிழிந்த சவ்வின் வலுவைத் திரும்பப் பெறலாம்.

இது போன்ற ஜவ்வில் ஏற்ப்படும் காயங்கள் பொதுவாய் விளையாட்டு வீரர்களை அதிகம் பாதிக்கிறது, முறையான உடற்பயிற்சியும், தகுதியான இயன்முறை மருத்துவமும், இதே போன்ற ஜவ்வில் ஏற்ப்படும் காயங்களை வாராமல் தடுப்பதோடு, ஒரு சிறந்த விளையாட்டு வீரரை இந்த நாட்டிற்குக் கொடுக்க முடியும், இது போன்ற ஜவ்வில் ஏற்ப்படும் காயங்கள் விளையாட்டு வீரரின் விளையாட்டுத் திறனை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் சில நேரங்களில் அந்த விளையாட்டு வீரர் வாழ் நாள் முழுவதும் அந்த விளையாட்டைத் தொடராமலே போகவும் வாய்ப்பு உள்ளது.

எனவே வருமுன் காப்போம் உடற்பயிற்சி மூலம், வந்த பின் தகுதியான சிறந்த மருத்துவத்தை பின்பற்றுவோம்.

முத்துக்கமலம் இணைய இதழ்

இதையும் படிங்க

கேரட் அதிகளவில் உண்டால் பக்கவிளைவுகள் வருமா?

கேரட்டை பார்த்தாலே ஓர் அழகு! கண்ணை கவரும் ஆரஞ்சு வண்ணத்தில், கடித்தால் மறக்க முடியாத சுவை நிறைந்தது. "அளவுக்கு...

உங்கள் மண்ணீரல் நன்றாக இயங்காவிட்டால்…

மனித உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் அதனதன் பணியைச் சிறப்பாகச் செய்தால்தான் நோயின்றி வாழ முடியும். அப்படி சிறப்பாக செயல்பட வேண்டிய உள்...

சமைக்காத உணவின் பயன்கள்

நவீன மருத்துவத்தில் பல்வேறு முன்னேற்றங்களை கண்டு வரும் அதே வேளையில் பாரம்பரிய மருத்துவத்தை நோக்கி மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், சமைத்து சாப்பிடும் உணவை...

சன் சார்ஜ் தண்ணீர் பக்கவிளைவற்ற மருந்து

சன் சார்ஜ் தண்ணீர் இதை பற்றி உங்களுக்கு தெரியுமா அதி அற்புதமான பக்கவிளைவற்ற மருந்தாக ஆயுள்வேதத்தில் பரிந்துரைக்கப்பட்ட இது விட்டமின் நிறைந்த அருமருந்து. ...

சக்கரை நோயாளிகள் சாப்பிட கூடாத பழங்களிலொன்று

சக்கரை நோயாளிகள் கிளைஸிமிக் இண்டக்ஸ் ( Glycemic index) குறைவாக இருக்கும் பழங்களைத்தான் அதிகம் சாப்பிட வேண்டும். குறிப்பாக அன்னாசி பழத்தில் சிறிது அதிகமாக...

உடலுக்கு யோகா… உள்ளத்துக்கு தியானம்…

உலகில் பிறந்த எல்லா மனிதர்களும் உடல் ஆரோக்கியமாகவும், உள்ளம் அமைதியாகவும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகிறோம். ஆனால் நோயும் மனக்கவலையும் அதிகரித்துக்கொண்டே...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

எரிவாயு சிலிண்டர்கள் ஜூலை 06 வரை இல்லை

சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஜூலை மாதம் 06 ஆம் திகதி வரை கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாமென லிட்ரோ நிறுவனம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

பெட்ரோல் ஏற்றிய கப்பல் தாமதமடையும் | எரிசக்தி அமைச்சர்

இன்று (24) நாட்டை வந்தடையவிருந்த பெட்ரோல் ஏற்றிய கப்பல் மேலும் தாமதமடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இது தொடர்பில் மன்னிப்பு கோருவதாகவும்...

மே 9 வன்முறையில் கைதான நால்வருக்கு பிணை

கடந்த மே மாதம் 9 ஆம் திகதியும் 10 ஆம் திகதியும் கொழும்பு கோட்டை மற்றும் தலங்கம பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 04 பேருக்கு...

மேலும் பதிவுகள்

எரிபொருள் கப்பலின் வருகை மேலும் தாமதம் | கஞ்சன விஜேசேகர

நாட்டிற்கு எரிபொருள் கப்பல் வருகை தருவது மேலும் தாமதம் அடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். விநியோகஸ்தர்கள் தொடர்புகொண்ட அமைச்சர்...

சன் சார்ஜ் தண்ணீர் பக்கவிளைவற்ற மருந்து

சன் சார்ஜ் தண்ணீர் இதை பற்றி உங்களுக்கு தெரியுமா அதி அற்புதமான பக்கவிளைவற்ற மருந்தாக ஆயுள்வேதத்தில் பரிந்துரைக்கப்பட்ட இது விட்டமின் நிறைந்த அருமருந்து. ...

இலங்கைக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சர்வதேச பிணையங்களுக்காக, 25% முதலீட்டை செய்துள்ள அமெரிக்க நிறுவனமொன்று, ஜூலை 25 ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ள நிலையில் ஆரம்ப முதலீடு மற்றும் அதற்கான...

இலஞ்சம் பெற்ற பிரதேச சபையின் தலைமை எழுதுவினைஞர் கைது

ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் தலைமை எழுதுவினைஞர் உள்ளிட்ட இருவர் 15 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு – செங்கலடி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சீன நகரில் டெஸ்லா காருக்கு தடை

சீனா தலைமையின் முக்கிய வருடாந்த கூட்டம் வரும் ஜூலை முதலாம் திகதி தொடக்கம் இரண்டு மாதங்கள் இடம்பெறுவதால் சீனத் துறைமுக நகரான பெய்டெய்ஹேவுக்கு டெஸ்லா கார்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் முன்னேறி செல்லும் ரஷ்யா

கிழக்கு உக்ரைனில் மேலும் இரு கிராமங்களைக் கைப்பற்றி ரஷ்யப் படை முன்னேற்றம் கண்டுள்ளது. இது குறித்து உக்ரைன் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிந்திய செய்திகள்

இன்றைய ராசி பலன் (26.6.2022)

மேஷம்: குடும்பத்தில் நிம்மதி உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில்...

கோவில் மணியை எப்போது அடிக்க வேண்டும்

இறைவனை வணங்கும் போது மட்டும் தான் கோவில் மணி ஓசையை அடிக்க வேண்டும். இறைவனுடைய திருமேனியை நாம் தரிசனம் செய்யும் பொழுதும், இறைவனை இருகரம் கூப்பி...

எரிபொருள் கப்பலின் வருகை மேலும் தாமதம் | கஞ்சன விஜேசேகர

நாட்டிற்கு எரிபொருள் கப்பல் வருகை தருவது மேலும் தாமதம் அடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். விநியோகஸ்தர்கள் தொடர்புகொண்ட அமைச்சர்...

வேண்டுதல் நிறைவேற இதை செய்ய வேண்டும்

கோவிலுக்கு உள்ளே செல்லும் பொழுது எப்பொழுதும் வெறும் காலில் செல்ல வேண்டும். அது போல கோவிலுக்கு வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு வெளியில் வரும் பொழுது...

பொன்னிற மேனி அழகுக்கு சந்தனம்..

பாரம்பரிய நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் சந்தனம், அழகு பராமரிப்புப் பொருட்கள் தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்கிறது. சந்தன சோப்புகள், சந்தன...

புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பட்டாணி கார சுண்டல்

தேவையான பொருட்கள் பச்சை பட்டாணி - 1 கப், கேரட் துருவல் - 3...

துயர் பகிர்வு