ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் அருகே ஷாஸ்தரக் பகுதியில் உள்ள எண்டிஎஸ் உளவுத்துறை நிறுவனம் அருகே இன்று (30) காலை மோட்டர் சைக்கிளில் வந்த தற்கொலைப்படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்களில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புக்காக பொலிஸார் குவிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களுக்கு உதவி செய்யும் பணியில் அனைவரும் ஈடுபட்டிருந்த நிலையில், அடுத்த குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் பத்திரிக்கையாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
ஒரே இடத்தில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதலால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. அசாதாரண சூழ்நிலையை மாற்ற பொலிஸார் முயற்சி செய்து வருகின்றனர்.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
