8
கொங்கோ நாட்டில் ஏற்பட்ட படகு விபத்தில் 50 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மொங்கோடோ நகரிலிருந்து ஈக்வடார் மாகாணத்தில் உள்ள மாபாந்தகா நகரத்திற்கு ஏராளமான பொருட்களை எடுத்துச் சென்ற போதே குறித்த படகு விபத்து இடம்பெறும் போது படகில் சுமார் 100க்கும் அதிகமானோர் பயணித்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் மீட்பு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
