யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் J /233 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட மாம்பிராய், மாங்கொல்லை பகுதிகளைச் சேர்ந்த 85 குடும்பங்களுக்குச் சொந்தமான குறித்த காணியே இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து 36 ஏக்கர் காணி இன்று மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக, தெல்லிப்பளை பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
விடுவிக்கப்பட்ட காணிகளில் காடுகள் வளர்ந்து காணப்படுவதால், மக்கள் தமது வீடுகள் மற்றும் ஒழுங்கைகள் என்பவற்றை இனங்காண முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமது சொந்த காணிகளை சுத்தம் செய்து மீள்குடியேறுவதற்கு வலிகாமம் வடக்கு பிரதேச செயலக, மீள்குடியேற்ற செயலணி அதிகாரிகள் தமக்கு உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
