
அகதிகள் ஐரோப்பிய நாடுகளிற்கு சென்ற படகு துருக்கி நாட்டின் கடற்பகுதியில் இன்று கவிழ்ந்த விபத்தில் 6 குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
15 அகதிகள் படகு mulam ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கத்தில் துருக்கி நாட்டின் அன்ட்டாலயா மாகாணம், டெம்ரே மாவட்டத்துகுட்பட்ட பிரபல சுற்றுலாத்தலம் அருகே கடற்பகுதியில் கவிழ்ந்த விபத்தில் 6 குழந்தைகள், ஒருபெண் உள்பட 9 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நடுக்கடலில் சிக்கி தத்தளித்த ஒரு பெண் உள்பட 5 பேரை உயிருடன் மீட்ட துருக்கி கடலோரக் காவல் படையினர், காணாமல்போன ஒருவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.