செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் றமழான் பெருநாளில் கலந்து கொண்டவர்கள் மீது கார்குண்டுத் தாக்குதல்!

றமழான் பெருநாளில் கலந்து கொண்டவர்கள் மீது கார்குண்டுத் தாக்குதல்!

0 minutes read


ஆப்கானிஸ்தானின் நங்கஹார் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட கார்குண்டுத் தாக்குதலில் 36 பேர் பலியாகியுள்ளனர்.

றமழான் பெருநாளை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் தலீபான்களுக்கும் இடையில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பொதுமக்களும் ஆப்கானிய பாதுகாப்புப் படைகளும், தலீபான்களும் கூடியிருந்த ஒரு கூட்டத்தில் இந்த கார் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 20 பேர்வரையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், சிகிச்சைகள் பலன் இன்றி பலர் மரணித்தனர்.

சம்பவத்தில் 65 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், மரணித்தவர்களில் அனைத்து தரப்புக்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.