செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா உக்ரேனில் இரண்டாவது இந்திய மாணவர் உயிரிழப்பு

உக்ரேனில் இரண்டாவது இந்திய மாணவர் உயிரிழப்பு

1 minutes read

உக்ரேனில் உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

உக்ரேன் தலைநகரான கீவ் நகரை கைப்பற்றுவதில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது. நேற்றுமுன்தினம் நடந்த போரில் கார்கிவ் நகரில் ரஷ்யப் படையினரின் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த நவீன் என்ற மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், நேற்று இரண்டாவதாக மற்றொரு இந்திய மாணவர் உயிரிழந்திருக்கிறார்.

இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் பர்னாலவைச் சேர்ந்த சந்தன் ஜின்டால் என்ற 22 வயது மாணவர், உக்ரேனில் உள்ள வின்னிட்சியா நேஷனல் பைரோகோவ் மெமோரியல் மெடிக்கல் பல்கலைக்கழகத்தில் படித்து வந்துள்ளார். அவர் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதகாலமாக சிகிச்சைப் பெற்று வந்திருக்கிறார். 

இந்நிலையில், சந்தன் ஜின்டால் மூளையில் பக்கவாதம் ஏற்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

உடல்நலக்கோளாறு காரணமாக இந்திய மாணவர் உக்ரேனில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.