பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களுக்கும் சீன தூதுவருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பாராளுமன்ற கட்டட தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் தற்போதைய நிலை, இலங்கைக்கான சீனாவின் ஒத்துழைப்புகள், இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
சீனாவின் உதவிகள் தொடர்ச்சியாக இலங்கைக்கு அவசியம் என இதன்போது சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்கள் சீன தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.