செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ஜப்பானில் ஆபாச படத்தில் நடிப்போருக்கு பாதுகாப்பு சட்டம்

ஜப்பானில் ஆபாச படத்தில் நடிப்போருக்கு பாதுகாப்பு சட்டம்

0 minutes read

ஆபாசப் படங்களில் தோன்றுபவர்களை அழுத்தத்தில் இருந்து பாதுகாப்பதற்கு ஜப்பானில் முதல் முறை சட்டம் ஒன்று நேற்று புதன்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பல பில்லியன் டொலர் வருவாய் ஈட்டும் துறையில் உள்ள சுரண்டலை எதிர்த்து போராடுவதற்கான முக்கிய நடவடிக்கை என்று இந்த சட்டம் வரவேற்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின்படி ஆபாசப் படங்களில் தோன்றுபவர்கள் எந்தக் காரணமும் கூறாது ஓர் ஆண்டுக்குள் தமது ஒப்பந்தத்தை ரத்துச் செய்யவும் தண்டப் பணம் செலுத்துவதை தவிர்ப்பதற்கும் அனுமதி அளிக்கிறது.

இது நிகழும் பட்சத்தில் அந்த வீடியோவை அழிப்பதற்கு மற்றும் மீளப்பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் வயது வந்தோரின் வயது 20 இல் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டதை அடுத்தே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆபாச திரைப்பட தயாரிப்பாளர்கள் 18 மற்றும் 19 வயதுடையவர்களை பணியில் அமர்த்த முயற்சிக்கலாம் என்ற கவலை அதிகரித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.