செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஜனாதிபதி விசாரணைக் குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்கத் தயார்! – கோட்டா அறிவிப்பு

ஜனாதிபதி விசாரணைக் குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்கத் தயார்! – கோட்டா அறிவிப்பு

0 minutes read

‘சனல் 4’ ஊடகம் என் மீது முன்வைத்துள்ள போலிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்கத் தயார் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான ‘சனல் 4’ தொலைக்காட்சியின் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ள ஆணைக்குழு தொடர்பில் கோட்டாபய கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“என் மீதான போலிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எந்த விசாரணைக் குழு முன்னிலையிலும் வாக்குமூலம் வழங்கத் தயாராகவுள்ளேன். எனவே, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு என்னை அழைத்தால் அந்த ஆணைக்குழு முன்னிலையிலும் நான் வாக்குமூலம் வழங்குவேன். என் மீது போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உண்மைகளை மறைக்க முடியாது. உண்மைகள் வெளிவர வேண்டுமெனில் நான் வாக்குமூலம் வழங்கியே தீர வேண்டும்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.