செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு மேலும் ஒரு செஞ்சுரி சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ

மேலும் ஒரு செஞ்சுரி சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ

1 minutes read

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், கடந்த 1955 முதல், ஆண்டுதோறும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் நடப்பது வழக்கம். இந்தாண்டு, 64 வது சாம்பியன்ஸ் லீக் தொடருக்கான லீக் போட்டிகள் நடக்கிறது.

இதன் துரினில் உள்ள ஜூவாண்டஸ் அணி, ஸ்பெயினின் வாலன்சியா அணியை எதிர்கொண்டது. இதன் முதல் பாதி 0-0 என சமநிலை வகித்தது. ஆனால் இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய ஜூவாண்டஸ் அணிக்கு மரியோ ஒரு கோல் அடித்தார்.

இதற்கு வாலன்சியா வீரர்களால் கடைசிவரை பதிலடி கொடுக்கமுடியவில்லை. இறுதியில் ஜூவாண்டஸ் அணி 1-0 என்ற கோல்கணக்கில் வாலன்சியா வீழ்த்தியது.

இந்நிலையில், இப்போட்டியில் பங்கேற்ற ஜூவாண்டஸ் ரொனால்டோ, இதன் மூலம் சாம்பியன்ஸ் லீக் அரங்கில் 100 வெற்றிகளை பெற்ற வீரர் என்ற என்ற பெருமை பெற்றார். இதன்மூலம் சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்கும் 140 அணிகளில், 136 அணிகள் பெற்ற வெற்றியை விட ரொனால்டோ பெற்ற அதிக வெற்றிகளை பதிவு செய்து அசத்தினார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.