
இலங்கை டெஸ்ட் அணியில் மேலும் 2 வீரர்கள் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இலங்கை அணியின் சகலதுறை வீரரான தனஞ்சய டி சில்வா மற்றும் சுழற்பந்து வீச்சாளரான ஜெஃப்றி வெண்டர்சே ஆகியோரே இவ்வாறு கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நாளை காலியில் ஆரம்பமாகும் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் தனஞ்சய டி சில்வா மற்றும் ஜெஃப்றி வெண்டர்சே ஆகியோர் இடம்பெறமாட்டார்களென இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
இவர்களுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர்களான பிரபாத் ஜயசூரிய மற்றும் லக்ஷான் சந்தகென் ஆகியோர் குழாமிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஏற்கனவே கொவிட் தொற்றுக்குள்ளாகியிருந்த ஏஞ்சலோ மெத்யூஸ் தற்போது அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
மேலும் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ள பிரவீன் ஜயவிக்ரமவும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.