செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு விம்பிள்டன் சீமாட்டிகள் அரை இறுதிகளில் 3 புதிய வீராங்கனைகள்

விம்பிள்டன் சீமாட்டிகள் அரை இறுதிகளில் 3 புதிய வீராங்கனைகள்

1 minutes read

விம்பிள்டனில் இந்த வருடம் சீமாட்டிகளுக்கான (மகளிர்) ஒற்றையர் பிரிவு அரை இறுதிகளில் விளையாடும் மூவர் முதல் தடவையாக கிராண்ட் ஸ்லாம் இறுதி ஆட்டத்தில் விளையாடும் தகுதியைப் பெறுவதற்கு முயற்சிக்கவுள்ளனர். அவர்களில் புதியவர் ஒருவர் நிச்சயமாக இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது உறுதியாகியுள்ளது.

நிரல் படுத்தலில் உயரிய நிலையில் உள்ளவர்களில் ஒன்ஸ் ஜெபோர் மாத்திரமே அரை இறுதிகளில் விளையாட தகுதிபெற்றுள்ளார். ஒருவர் நிரல்படுத்தலில் இடம்பெறாததுடன் மற்றைய இருவர் 16ஆம், 17ஆம் இடங்களில் இருக்கின்றனர்.

இன்று நடைபெறவுள்ள முதலாவது அரை இறுதிப் போட்டியில் டியூனிசியாவின் ஒன்ஸ் ஜெபோர், நிரல்படுத்தலில் இடம்பெறாத ஜேர்மனியின் டட்யானா மரியா ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்தாடவுள்ளனர்.

இவர்கள் இருவரும் இதுவரை கிராண்ட் ஸ்லாம் இறுதி ஆட்டத்தில் விளையாடியதில்லை. எனவே இவர்களுக்கு இடையிலான அரை இறுதியில் வெற்றிபெறுபவர் முதல் தடவையாக க்ராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறுவார்.

இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் முன்னாள் சம்பியன் சிமோனா ஹாலெப் (ருமேனியா), எலினா ரிபக்கினா (கஸக்ஸ்தான்) ஆகிய இருவரும் மோதவுள்ளனர்.

2019இல் சம்பியனான சிமோன ஹாலெப் நிரல்படுத்தலில் 16ஆவது இடத்திலும் எலினா ரிபக்கினா நிரல்படுத்தலில் 17ஆவது இடத்திலும் உள்ளனர்.

சிமோனா ஹாலெப்பை எலினா ரிபக்கினா வெற்றிகொண்டால் விம்பிள்டனில் இம்முறை புதிய ஒருவர் சம்பியன் பட்டத்தை சூடுவது உறுதியாகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.