Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை சரத் வீரசேகராவிற்கு கலாநிதி குமரகுருபரன் எழுதிய பகிரங்க கடிதம்

சரத் வீரசேகராவிற்கு கலாநிதி குமரகுருபரன் எழுதிய பகிரங்க கடிதம்

5 minutes read
கலாநிதி குமரகுருபரன் அகவை ஐம்பத்தொன்பதை நிறைவு செய்து 59 பிறந்த தினத்தை  இன்று காண்கின்றார் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada

ராஜாங்க  அமைச்சர்  ரெய அட்மிரல் சரத் வீரசேகராவிற்கு முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் தமிழ் தேசிய பணிக்குழுவின் தலைவர் கலாநிதி நல்லையா குமரகுருபரன் ஒரு பகிரங்க கடிதம் .

  ரெய அட்மிரல் சரத் வீரசேகராஅவர்களே உங்களுக்கு இதை ஒரு உண்மையான   இலங்கையராக எழுதுவதில் நான் மகிழ்ச்சியடை கின்றேன் .

மகிந்த ராஜபக்ச  அவர்கள்அவரது நீண்டகால அரசியலால் தமிழ் மக்களின் பிரச்சனைகளை நன்கு புரித்தவர்  நீங்களும் அவ்வழியில் சிந்தியுங்கள் ஐக்கிய இலங்கையை , பல்லின பல்மத யதார்த்தத்தை , இனங்களுக்கிடையான சக வாழ்வை மனதிற் கொண்டு பேசுங்கள் .  ஐக்கிய இலங்கையில் பல் இனமும் பல் மதமும் சௌஜன்யம் மிக்க சக வாழ்வு வாழ்வதை உறுதிப்படுத்த வேண்டும் சுபீட்சமான இலங்கையை ஏற்ப்படுத்துவோம் என திடசங்கடற்ப்பம் கொள்ளுங்கள் .  

   இலங்கை இந்திய உடன் படி க்கையை ,இலங்கை வரலாற்றில்  இனக்கலவரங்களை, இடம்பெற்ற பல்வேறுபட்ட  யுத்தங்களின் உக்கிரத்தை  ,  இந்தியாவிற்கு  ஏற்ப்பட்ட அக்கறையை , மாகாண சபை முறைமை உருவான தேவையை  ,  அதற்காக ஏற்ப்படுத்த பட்ட அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தை  , அந்த நிலமை உருவான வரலாற்றை புரியாது  மாகாணசபை முறையை இல்லாதொழிப்பதென  நீங்கள் இன்றய அரசியலை கங்கணம் கட்டிக்கொண்டு இனவாதமாக்குகின்றீர்கள் . 

ஜூலை ’83 இனக் கலவரம், இந்தியாவுக்கு அதற்கான வாய்ப்பை வெகுவாக ஏற்படுத்திக் கொடுத்தது. அன்று அந்தக் கலவரம் இடம்பெறாதிருந்தால், இந்தியத் தலையீடு சிலவேளை வேறு விதமாகத் தான் அமைந்திருக்கும். 

ஐக்கிய இலங்கையில் பல் இனமும் பல் மதமும் சௌஜன்யம் மிக்க சக வாழ்வு வாழ்வதை உறுதிப்படுத்த வேண்டும்.மாகாணசபை முறைமையை மிகவும் சாணக்கியமாகவே ஜெ ஆர் ஜெயவர்த்தன வடக்கு கிழக்குக்கு மட்டுமன்றி முழு இலங்கைக்கும் அதிகார பரவலாக்கலை மாகாண சபைகளாக வழங்கினார் . மத்திய அரசுக்கும் வேலை பழு  குறைந்து அரசியல் அதிகாரமும் பகிர்ந்தளிக்கப்பட்டு இருக்கும் சுமூக நிலையை அதன் நியாயத்தைஜெ ஆர் ஜெயவர்த்தன வின் அரசியல் அனுபவத்தினின்று இன்றைய கற்றுக்குட்டிகள் பார்க்க வேண்டும் 

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அதற்கான காரணம் கூறும் முதற் பந்தி களை வாசித்தால் அந்நிலை தெளிவாகப்புரியும் ,    

இலங்கையின் இனப்பிரச்சினைக்கும் அதன் விளைவான வன்செயல்களுக்கும் தீர்வு காண வேண்டியதன் தவிர்க்க முடியாத அவசியத்தையும் இலங்கையிலுள்ள சகல சமூகங்களையும் சேர்ந்த மக்களின் பாதுகாப்பு, நலன்புரி நடவடிக்கைகள், சுபீட்சம் ஆகியவற்றை உணர்ந்தும்,  இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாரம்பரிய நட்புறவை ஆதரித்துத் தீவிரப்படுத்தி மேலும் வலுப்படுத்துவதின் முக்கியத்துவத்தை கருத்திற் கொண்டும், இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகப் அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி     ஜே ஆர். ஜெயவர்த்தனாக்கும் இடையே யூலை 29, 1987ம் ஆண்டு ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் ஆகும். இந்த ஒப்பந்தம் இலங்கை ஒரு பல்லின, பல்மத, பல்மொழி நாடாக ஏற்று வடகிழக்கை தமிழ் முஸ்லீம் மக்களின் இணைந்த தாயகப்பிரதேசமாக ஏற்று தமிழ் மொழியை அரச மொழியாக ஏற்று மாகாண சபைகளுடான அதிகாரப் பரவலாக்கத்தை முன்வைக்கின்றது. ”  இது தமிழ் மக்கள் அபிலாசைக்கேற்ற அரசியல்தீர்வுமல்ல .ஆயினும் அதிகாரபரவலாக்கலின் முதற்படியாக கொள்ளலாம்.  

எனவே காரணமிருக்க முடியாத காழ்ப்புணர்வுடன்  மாகாண சபை முறையை இல்லாது ஒழிக்க வேண்டும் எனும் பிரசாரத்தை முன்னெடுப்பதுஆரோக்கியமானது மட்டுமல்ல சௌஜன்ய சகவாழ்வை இம்சைக்குள்ளாக்குவதுமாகும் . இதை விடுத்து ஸ்திரமான அரசின்  சௌஜன்ய சகவாழ்வு மிக்க சுபீட்சமான இலங்கையை ஏற்ப்படுத்த காழ்புணர்வை விடுத்து இலங்கையை நேசித்து  பரந்த மனத்துடன் செயற்ப்படுங்கள் . 

எனவே காரணமிருக்க முடியாத காழ்ப்புணர்வுடன்  மாகாண சபை முறையை இல்லாது ஒழிக்க வேண்டும் எனும் பிரசாரத்தை முன்னெடுப்பது பல் இனமும் பல் மதமும் வாழும் நாட்டில் ஆரோக்கியமானது மட்டுமல்ல சௌஜன்ய சகவாழ்வை இம்சைக்குள்ளாக்குவதுமாகும்

இதை விடுத்து ஸ்திரமான அரசின்  சௌஜன்ய சகவாழ்வு மிக்க சுபீட்சமான இலங்கையை ஏற்ப்படுத்த காழ்புணர்வைவிடுத்து இலங்கையை நேசித்து  பரந்த மனத்துடன் செயற்ப்படுங்கள் .  புதுவருடம் சுபீட்சம் மிக்கதாய் அமையட்டும் என கலாநிதி நல்லையா குமரகுருபரன் தெரிவித்துள்ளார்  .

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More